புத்தாண்டில் உலகளவில் குழந்தை பிறப்பில் இந்தியா சாதனை: 67 ஆயிரம் புதிய வருகை

நியூயார்க்:  உலகம் முழுவதும் நேற்று முன்தினம் புத்தாண்டு பிறந்த நள்ளிரவு 12 மணிக்கு பிறந்த குழந்தைகள் குறித்த விவரங்களை யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு: இந்த புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், அதிகப்பட்சமாக இந்தியாவில் 67 ஆயிரத்து 385 குழந்தைகளும், சீனாவில் 46 ஆயிரத்து 299 குழந்தைகளும் பிறந்துள்ளன.

அடுத்த இடங்களில் நைஜீரியா (26,039), பாகிஸ்தான் (16,787), இந்தோனேஷியா (13,020) நாடுகள் உள்ளன. 2018ம் ஆண்டில் குறை பிரசவம், சிக்கலான பிரசவம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, பிறந்த ஒரு மாதத்துக்குள் 25 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளன. எனினும், மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, இந்த பிரச்னைகளால் இறக்கும் எண்ணிக்கை தற்போது 47 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: