மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் இல்லம் மீது உக்ரைன் டிரோன்கள் கொண்டு தாக்கிய வீடியோ காட்சிகளை ரஷ்யா வெளியிட்டு உள்ளது. ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் ரஷ்ய அதிபர் புடினின் இல்லம் உள்ளது. இந்த வீட்டை 91 டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார். இந்த தகவலை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுத்து தாக்குதல் நடத்தப்பட வில்லை என விளக்கம் அளித்தார். இந்நிலையில், அதிபர் புடின் மாளிகை மீது உக்ரைன் ட்ரோன் கொண்டு தாக்கிய விடியோ காட்சிகளை ரஷ்யா வெளியிட்டு உள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த விடியோவை வெளியிட்டு இருக்கிறது.
