வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவிற்கு எதிரான தனது அழுத்தத்தை தீவிரப்படுத்தி உள்ளார். இதன் ஒரு பகுதியாக வெனிசுலாவின் 4 எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படும் மேலும் மூன்று படகுகளை அமெரிக்க ராணுவம் தாக்கியதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
