தைவானை சீனாவுடன் இணைப்பது உறுதி: புத்தாண்டு உரையில் ஜின்பிங் உறுதி

பெய்ஜிங்: தைவானை சீனாவுடன் இணைப்பது தடுக்க முடியாதது என்று புத்தாண்டு உரையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு சீன நாட்டு மக்களுக்கு அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: தைவான் நீரிணையின் இருபுறமும் உள்ள சீன மக்கள் இரத்தம் மற்றும் உறவுப் பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

நமது தாய்நாட்டின் மீள் இணைப்பு, காலத்தின் ஒரு போக்கு, இது தடுக்க முடியாதது. யார்லுங் சாங்போ (பிரம்மபுத்திரா நதி) ஆற்றின் கீழ் பகுதிகளில் நீர்மின் திட்டத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.
சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் புஜியான் செயல்பாட்டிற்கு வந்தது மகிழ்ச்சி. நமது பொருளாதார உற்பத்தி அடுத்தடுத்து பல மைல்கற்களைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டு அது 140 டிரில்லியன் யுவான் (20 டிரில்லியன் டாலர்) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமது பொருளாதார வலிமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள், பாதுகாப்புத் திறன்கள் மற்றும் ஒட்டுமொத்த தேசிய வலிமை அனைத்தும் புதிய உச்சங்களை எட்டியுள்ளன. சீனா எப்போதும் வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்கிறது. உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவும், மனிதகுலத்திற்கு ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தை உருவாக்கவும் அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது. இவ்வாறு பேசினார்.

Related Stories: