சோபியா:பல்கேரியா நாட்டின் நாணயமாக லெவ் இருந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், பல்கேரியாநாட்டில் யூரோவை நாணயமாக ஏற்க முடிவெடுத்தது. இந்த முடிவுக்கு கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி ஐரோப்பிய கவுன்சில் இறுதி ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் நேற்று முதல் பல்கேரியாவின் அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்று கொள்ளப்பட்டது. இதன் மூலம் யூரோ மண்டலத்தின் 21வது உறுப்பினராக பல்கேரியா இணைந்துள்ளது.
