உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்: புடின் பரபரப்பு உரை

மாஸ்கோ: புத்தாண்டிற்கு முன்தினமான நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின், உக்ரைனுடன் நடந்து வரும் போர் குறித்து பேசினார். அவர் கூறுகையில்,’ ரஷ்யா, உக்ரைனில் நடக்கும் போரில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். உங்கள் மீதும், எங்கள் வெற்றி மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நமது ராணுவ வீரர்களை நாம் ஆதரிக்க வேண்டும். முழு ரஷ்யாவின் லட்சக்கணக்கான மக்களும், என்னை நம்புங்கள், நாங்கள் உங்களைப் பற்றி சிந்திக்கிறோம்’ என்றார்.

உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம் என்று ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளது, அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

Related Stories: