அமெரிக்கா- சீனா வர்த்தகபோர் முடிவுக்கு வந்ததன் எதிரொலி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 68 டாலர்களாக உயர்வு

வாஷிங்டன்: அமெரிக்கா -  சீனா வர்த்தப்போர் முடிவுக்கு வந்ததன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 0.2 சதவிகிதம் அளவு உயர்ந்து 68 டாலர்களாக இருந்தது. அமெரிக்க நுகர்வோர், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த விடுமுறை காலத்தில் பொருட்களை வாங்கி குவித்துள்ளனர். இது அமெரிக்கா பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதால் உற்பத்தி அதிகரிப்பதற்கு வழிவகுப்பதோடு கச்சா எண்ணெய் தேவையை அதிகரிக்க செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல உலகளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போருக்கு புத்தாண்டில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு வழிவகுத்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தைப் பொறுத்தே இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயரும் போது இந்தியாவிலும் பெட்ரோல் –டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகளவில் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: