காவேரிப்பாக்கம் பகுதிகளில் சொர்ணவாரி பருவத்தில் விவசாய பணிகள் மும்முரம்

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் பகுதிகளில் சொர்ணவாரி பருவத்தில் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.காலம் பார்த்து உழவு செய் என்பது பெரியவர்கள் வாக்கு. ஆடிப்பட்டம், கார்த்தி மாதம், தை மாதம் உள்ளிட்ட காலங்களில் உழவு பணியில் ஈடுபட்டால், விவசாயம் செழிப்பாக இருக்கும். விவசாயிகளின் எதிர்பார்ப்பு போல் மகசூலும் கிடைக்கும்.இந்நிலையில், காவேரிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தற்போது விவசாயிகள் சொர்ணவாரி பருவத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, பங்குனி மாதத்தில் விதை விதைத்த விவசாயிகள், தற்போது நெல் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விவசாய பணிகளை மேற்கொள்ள ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவும், விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்காத காரணத்தாலும், விவசாய பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. பயிர்களுக்கு இடப்படும் உரங்களின் விலையைபோல், நெல்லின் விலையும் ஒரு மூட்டைக்கு ₹2,500 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது….

The post காவேரிப்பாக்கம் பகுதிகளில் சொர்ணவாரி பருவத்தில் விவசாய பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: