பணியில் இல்லாத டாஸ்மாக் சூபர்வைசர்களுக்கு ‘செக்’

சென்னை: விற்பனை நேரத்தில் பணியில் இல்லாத டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் அதிகம் விற்பனையாகும் நேரமாகும். எனவே, அந்த நேரத்தில் கண்டிப்பாக மேற்பார்வையாளர்கள் கடை பணியில் இருக்க வேண்டும். அவ்வாறு பணியில் இல்லாத மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட மேலாளர்கள் ஆய்வு செய்யும் போது மாலை நேரங்களில் கடை பணியில் இருந்தார்களா? என்பது குறித்து தலைமை அலுவலகத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்யவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தற்போது மாவட்ட மேலாளர்கள் தீவிர ஆய்வை நடத்தி வருகின்றனர். ஆய்வின் போது கடையில் இல்லாத மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்டம் வாரியாக இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: