இந்திய கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த வாய்ப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

கொல்லம்: ‘‘இந்திய கடலோர பகுதிகளில் அண்டை நாட்டு தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குலை  நடத்தக்கூடும்,’’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கேரளாவின் கொல்லத்தில் மாதா அமிர்தானந்தமயி தேவியின் 66வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கட்ச் முதல் கேரளா வரை நீண்டுள்ள நமது கடலோர பகுதியில், அண்டை நாட்டு தீவிரவாதிகள் மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தலாம் என்பதை நிராகரிக்க முடியாது. ஆனால், அவற்றை முறியடிக்கும் அளவில் நமது கடலோர படைகள் வலுவாகவும், உறுதியாகவும் உள்ளன.

நான் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான், புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிர்தியாகம் செய்த வீரர்களை யாரும் மறக்க முடியாது. இதற்கு பதிலடிாக பாகிஸ்தான் பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை தாக்குதலை நடத்தியது. நாம் யாரை பற்றியும் கவலைப்பட மாட்டோம். நம்மை சீண்டினால், அவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Related Stories: