சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் தண்ணீர் தட்டுப்பாடு: விலங்குகள், பறவைகளுக்கு போதிய நீர் இல்லை

சென்னை: கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் சென்னையை பொறுத்தவரயில் மாநகர மக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன. இந்நிலையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் 55 சதவீதம் குறைவாகவே பெய்தது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் வடகிழக்கு பருவமழையின் போது நீர் சேமிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது.

சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு 80 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு குறைவாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு பூங்கா, சுற்றுலா தளம் போன்றவைகளிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஏராளமான பறவைகள், பல்வேறு வகையான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை சமாளிக்க பூங்கா நிர்வாகம் தற்காலிக நீர்நிலைகளை அமைத்துள்ளது. விலங்குகள் மற்றும் பறவைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க கூண்டுகளில் ஈர சாக்கு பைகள் கட்டப்பட்டு, தண்ணீர் பீச்சு குளிர்விக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: