ஹபீஸ் சயீத் ஆதரவாளர் சொத்து முடக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்டவன். இந்த அமைப்புக்கு நிதி உதவி செய்த டெல்லியை சேர்ந்த முகமது சல்மான், அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத் துறை நிதி மோடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. முகமது சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் துபாயில் இருந்து ஹவாலா பணம் மூலம் லஷ்கர் அமைப்புக்கு நிதி உதவி செய்துள்ளனர். இந்நிலையில், சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.73.12 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை நேற்று அறிவித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: