பொன். மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை : சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. பொன். மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமனம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. பொன். மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. பணி ஒய்வு பெற்ற பொன். மாணிக்கவேலை அதிகாரியாக நியமித்ததற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கன்வில்கர், கே.எம்.ஜோசப் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: