பாதுகாப்பு வாகனத்தை தடுத்த தேர்தல் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் தகராறு: பீகாரில் பரபரப்பு

பக்சர்: பாதுகாப்பு வாகனத்தை தடுத்த தேர்தல் அதிகாரிகளுடன் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே, பீகாரின் பக்சர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரது பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிக வாகனங்கள் ஊர்வலம் வந்தன.  தேர்தல் விதிமுறையை மீறியதால், மத்திய அமைச்சர் வந்த வாகனத்தை தேர்தல் அதிகாரி உபாத்யாய் தடுத்து நிறுத்தினார். இதனால்ஆத்திரமடைந்த அஸ்வினி குமார், ‘‘என்ன பிரச்னை உங்களுக்கு? வாகனத்தை தடுக்க யார் உத்தரவு போட்டது? நீங்கள் ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தால், என்னை ஜெயிலுக்கு அனுப்புங்கள்.

என்னுடைய வாகனத்தை பறிமுதல் பண்ணிடுவீர்களா?’’ என கடும் தகராறில் ஈடுபட்டார். மத்திய அமைச்சரே, தேர்தல் அதிகாரியை மிரட்டல் தொணியில் பேசிய இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. இது குறித்து உபாத்யாய் கூறுகையில், ‘‘30 முதல் 40 வாகனங்கள் அமைச்சுருடன் வந்தன. இந்த விஷயத்தில் தேர்தல் விதிப்படி நடவடிக்கை எடுப்போம். விதிமீறி வந்த எந்த வாகனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் விடமாட்டோம்’’ என திட்டவட்டமாக கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: