கர்நாடகாவில் கைதி லாக் அப் மரணம்? காவல்நிலையம் சூறை 11 போலீசார் படுகாயம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி காவல் சரகத்தில் திப்பு நகர் உள்ளது. இந்த நகரை சேர்ந்த 30 வயதான ஆதில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பிறகு சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், லாக் அப்பில் இறந்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் திப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ போல் பரவியது.

தகவல் கிடைத்த பொதுமக்கள், சென்ன கிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அத்துடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்து மேஜை, நாற்காலி, கம்ப்யூட்டர் ,வாகனங்களை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதை தடுக்க வந்த போலீசார் 11 பேரும் இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர். கார், ஜீப் என 5 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post கர்நாடகாவில் கைதி லாக் அப் மரணம்? காவல்நிலையம் சூறை 11 போலீசார் படுகாயம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: