மியாமி ஓபன் டென்னிஸ் 4ம் சுற்றுக்கு முன்னேறினார் வீனஸ்

மியாமி: அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், எளிதான வெற்றியுடன் மியாமி ஓபன் டென்னிஸ் 4ம்  சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடந்த 3வது சுற்றில் வீனஸ் வில்லியம்சை எதிர்த்து ரஷ்ய வீராங்கனை டேரியா கசட்கினா மோதினார். முதல் செட்டில் கசட்கினா சற்று தாக்குப்பிடித்தார். இருப்பினும் அவரது சர்வீஸ்களை அடுத்தடுத்து பிரேக் செய்த வீனஸ், முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். 2வது செட்டில் கசட்கினா முழுவதுமாக சரணடைந்து விட்டார். அந்த செட்டில் அவரது ஒரு கேமை மட்டுமே எடுக்க முடிந்தது. மிகவும் எளிதாக அந்த செட்டை 6-1 என்ற கணக்கில் வீனஸ் கைப்பற்றி, நேர் செட்களில் இப்போட்டியில் வெற்றி பெற்று 4ம் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த வெற்றி குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில், ‘‘நாங்கள் இருவரும் இதற்கு முன்னர் பலமுறை மோதி இருக்கிறோம். ஆனால் இந்தப் போட்டியில் நேர் செட்களில் அவரை வீழ்த்தி, எளிதாக வென்றது நிறைவைத் தருகிறது. இன்று நான் ஆக்ரோஷமாக ஆடினேன் என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார். இன்று இரவு நடைபெறும் 4வது சுற்றில் ரொமானிய வீராங்கனை சிமோனா ஹாலேப்பை எதிர்த்து வீனஸ் வில்லியம் மோதவுள்ளார். இதுவரை இருவரும் 6 போட்டிகளில் மோதியுள்ளனர். தலா  3 போட்டிகளில் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: