நீர்வள, நிலவள திட்டத்தை கண்காணிக்க சுற்றுச்சூழல் நிபுணரை கன்சல்டன்ட் அடிப்படையில் நியமிக்க முடிவு

* 6 ஆண்டுக்கு 73 லட்சம் ஊதியம்

* பொதுப்பணித்துறையில் சர்ச்சை

சென்னை: நீர்வள, நிலவள திட்டத்தை கண்காணிக்க சுற்றுச்சூழல் நிபுணரை கன்சல்டன்ட் அடிப்படையில் நியமிக்க முடிவு செய்து இருப்பது பொதுப்பணித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள பாசன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் நீர், நில வளத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் இரண்டாவது கட்டமாக உலக வங்கி நிதியுதவியின் கீழ் ₹3 ஆயிரம் கோடி  செலவில் 4,778 ஏரிகள், 477 அணைகள்ட்டுகளை புனரமைத்தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் 1325 ஏரிகள், 109 அணைகட்டுகள், 45 செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறுகள், 3 கால்வாய்கள் அமைக்க ₹743 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உலக வங்கிக்கு அறிக்கை அனுப்பி  வைத்தது. இதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வரை 500க்கும் மேற்பட்ட ஏரிகளில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே அடுத்த கட்டமாக 1,400 ஏரிகள் புனரமைப்பு பணிக்கான திட்ட அறிக்ைக தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நீர்வள நிலவளத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்  பணிகளுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் துறை நிபுணரை கன்சல்டன்ட் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று உலக வங்கி தமிழக அரசுக்கு கடிதம்  எழுதியது. அதன்பேரில் சுற்றுச்சூழல் நிபுணரை நியமனம் செய்வதற்காக ₹73 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ெதாடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த  அறிவிப்பில் சுற்றுச்சூழல் தொடர்பாக அனுபவமிக்க தகுதியான நிபுணர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளுக்கு ₹50 ஆயிரம் வீதம் மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் வாகன, உணவுப்படி தனியாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ெபாதுப்பணித்துறையில் சுற்றுச்சூழல் பிரிவு கண்காணிப்பு பொறியாளர்  தலைமையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தனியாக நிபுனர் நியமிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரி கூறும் போது, ‘பொதுப்பணித்துறையில் சுற்றுச்சூழல் பிரிவு தனியாக செயல்பட்டு வரும் நிலையில், தனியாக கன்சல்டன்ட் நியமிப்பதால் அரசுக்கு தான் வீண் செலவு ஏற்படும். எனவே, தனியாக  நிபுணர் நியமிப்பதை கைவிட வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: