விவிபேட் எந்திரத்தின் செயல்முறை விளக்கம் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடத்தப்படும் ; தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் எந்திரத்தின் செயல்முறை விளக்கம் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடத்தப்பட இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் ஷெனாய் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் எந்திரம் இணைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். விவிபேட் இயந்திரத்தின் செயல்முறை குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் விளக்கினார்.

யாருக்கு வாக்களித்தோம் என்று உறுதிபடுத்துவது ஒப்புகை சீட்டு அல்ல என்றும், 7 விநாடிகள் திரையில் அதனை பார்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதன் முறையாக அனைத்து வாக்கு சாவடிகளிலும் விவிபேட் என்று அழைக்கப்பட கூடிய யாருக்கு வாக்களித்தோம் என்று உறுதி செய்து கொள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பிரச்சார வாகனத்தை தமிழக தலைமை தேரதல் அதிகாரி சத்யபிரதா சாஹு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் நடைபெறும் என்றும், நாடாளுமன்றம், 20 தொகுதி இடைத்தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தக்கோரிய திமுகவின் மனு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் தமிழக தலைமை தேரதல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: