தொகுதிக்கு அடிப்படை வசதி: ஐட்ரீம்ஸ் மூர்த்தி உறுதி

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி நேற்று சோலையப்பன் தெரு, அவதானராமசாமி தெரு, பாண்டிச்சேரி முருகேசன் தெரு, வள்ளுவன் தெரு, தெலுங்கு தெரு, நல்லப்ப வாத்தியார் தெரு, ஆண்டியப்பன் தெரு, வரதராஜபெருமாள் தெரு, எம்.எஸ்‌.நாயுடு தெரு, பசுவைய்யன் தெரு, ஆறுமுகம் தெரு‌ ‌ஆகிய பகுதிகளில் வீதிவீதியாக பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார். அப்போது ஐட்ரீம்ஸ் மூர்த்தி பேசியதாவது, “இந்த பகுதியில் பல வருடங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அதனை சரிசெய்து தரும்படி இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பகுதியில் கழிவுநீர் குழாய் குடிநீர் குழாய்களை மாற்றி சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்கிறேன். மேலும் அடிப்படை வசதிகளை செய்து தருவேன். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பது தான் முதல் வேலையாக செய்வேன். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மூதியோர் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும். ஆட்டோ வாங்குபவருக்கு மானியம் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். பால் விலை குறைக்கப்படும்,” இவ்வாறு பேசினார். இதில் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, பகுதி செயலாளர் சுரேஷ், வட்ட செயலாளர் ரா.பாலன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்….

The post தொகுதிக்கு அடிப்படை வசதி: ஐட்ரீம்ஸ் மூர்த்தி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: