ஜூலை 6ம் தேதி பாஜ மாநில செயற்குழு கூட்டம்


சென்னை: பாஜ மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜூலை 6ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். செயற்குழுவில் ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துகொள்கிறார். மேலும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள்,

மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில அணிகள் மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியல் ெபருங்கோட்ட அமைப்பு செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார்.

The post ஜூலை 6ம் தேதி பாஜ மாநில செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: