இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகம் : பேரவையில் அமைச்சர் உதயநிதி புதிய அறிவிப்புகள்!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவை பின்வருமாறு..

*சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் உள்ள மாணவர் விடுதி ரூ. 25 கோடி மதிப்பீட்டில் உயர் செயல்திறன் விடுதியாக மேம்படுத்தப்படும்.

*சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். 100 வீரர் வீராங்கனைகளுக்கு 3% விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்படும்.

*ரூ.100 கோடியில் டாக்டர். கலைஞர் விளையாட்டு 2191 உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

*இந்தியாவிலே முதல்முறையாக, ரூ.12 கோடியில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.மேலக்கோட்டையூர் அருகே SDAT பிரத்யேக ஒலிம்பிக் Bicycle Motocross (BMX) ஓடுபாதை அமைக்கப்படும்.ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ் வீரர்கள் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தில் நடவடிக்கை.

*ரூ.50 கோடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின்கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களும் விளையாட்டு அரங்கங்களும் சீரமைக்கப்படும்

*முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள் ரூ.66 கோடி ஒதுக்கீடு : 22 சட்டமன்றத் தொகுதிகளில் சிறுவிளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.

*மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில்
Diving Pool-உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம்.தென் தமிழ்நாட்டைச் சார்ந்த நீச்சல் வீரர்/வீராங்கனைகள், சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தில் நடவடிக்கை.கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம்.

*ரூ.10 கோடியில் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

*தரம் உயரும் ஹாக்கி ஆடுகளம் : அரியலூர், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தற்போதுள்ள ஹாக்கி ஆடுகளம் செயற்கை இழை ஆடுகளமாகத் தரம் உயர்த்தப்படும்.தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை.

*கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழர் பாரம்பரியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். களரி, அடிமுறை, சிலம்பம், சுவடுமுறை, மல்யுத்தம், குத்துவரிசை, அடிதடை, வர்மம் போன்ற தென் தமிழ்நாட்டின் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் சீரிய முயற்சி.

*தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்களின் செயல் திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்திட Athlete Management System (AMS) எனும் மென்பொருள் செயல்படுத்தப்படும்.

*மேலக்கோட்டையூர், நுங்கம்பாக்கம், வேளச்சேரி வளாகத்தில் முதன்மைநிலை விளையாட்டு மையங்கள் (Centre of Excellence) அமைக்கப்படும். மேலக்கோட்டையூர் Fencing, Badminton, Cycling, Archery, Table Tennis
நுங்கம்பாக்கம்: Tennis வேளச்சேரி : Swimming & Gymnastics

*SDAT-யின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 2,330 இலிருந்து 2,600-ஆக உயர்த்தப்படும். நாள் ஒன்றுக்கான உணவுப்படி ரூ.250-இலிருந்து ரூ.350-ஆக உயர்த்தப்படும்.சீருடை மானியத் தொகை ரூ.4,000-இலிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தப்படும்.உபகரண மானியத் தொகை ரூ.1,000-இலிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்.

*ரூ. 5 கோடியில் நவீன விளையாட்டு உபகரணங்கள் : விளையாட்டுப் போட்டிகள். பயிற்சிகள், முகாம்கள் நடத்த விளையாட்டு விடுதிகளுக்குத் நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

*நவீன உடற்பயிற்சிக் கூடம் : மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் செயற்கை இழை ஹாக்கி ஆடுகளத்துடன் கூடிய புதிய நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைப்பு.

*சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதியுடன் கூடிய புதிய விளையாட்டு விடுதியும் அமைக்கப்படும்.

*இளைஞர்களை நல்வழிப்படுத்த புதிய இளைஞர் கொள்கை அறிமுகம். புதிய விளையாட்டு வீரர்களை அடையாளம் காண உதவும் உயரிய புதிய விளையாட்டுத் திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் உருவாக்கம்.

*ஒலிம்பிக் விளையாட்டுக்கு ரூ.20 இலட்சத்திலிருந்து ரூ.25 இலட்சமாக உயர்வு.. ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுக்கு ரூ.15 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாக உயர்வு

*தேசிய மாணவர் படை மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.14 இலட்சத்திலிருந்து ரூ 28 இலட்சமாக உயர்வு; நவீன ரக துப்பாக்கிகள் வாங்க நிதி உதவி உயர்த்தி வழங்க நடவடிக்கை

*நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்களுக்கு நிதி ஒதுக்கீடு : 2024 ஆம் ஆண்டு முதல் ரூ. 50 இலட்சம் தொடர் செலவினமாக வழங்கப்படும்.

*வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் / வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.2 இலட்சம் நிதி ரூ. 4 இலட்சமாக உயர்வு.

மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய வசதி: மாநிலத்தின் உள் வெளி விளையாட்டரங்கங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும்.

*தலைசிறந்த பத்து விளையாட்டு வீரர்கள் புதிய பயிற்சியாளர்களாக நியமனம். கோவை கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கான பணிகள் இந்தாண்டு தொடங்குகிறது.

The post இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகம் : பேரவையில் அமைச்சர் உதயநிதி புதிய அறிவிப்புகள்!! appeared first on Dinakaran.

Related Stories: