பொங்கல் பரிசு வழங்க சென்ற அதிமுக எம்.பி. முற்றுகை: சென்னிமலையில் பரபரப்பு

சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலைக்கு நேற்று பொங்கல் பரிசு வழங்க சென்ற அதிமுக எம்.பி., செல்லக்குமார சின்னையாவை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் ₹35 லட்சம் செலவில் ஓலக்காட்டுப்பதி என்னும் இடத்தில் இருந்து எல்.பி.பி உபரி நீர், குழாய் மூலம் முருங்கத்தொழுவு கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இத்திட்டம்  கடந்த இரண்டு மாதத்துக்கு முன் துவங்கியது. மேலும் இப்பகுதியில் இருந்து ₹10 லட்சம் செலவில் குழாய் நீட்டிப்பு செய்து காளிக்கா வலசு மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் உள்ள குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர டெண்டர் விடப்பட்டுள்ளது.

 இந்த பணி நடைபெறாமல் காலதாமதம் ஆவதால் நேற்று சென்னிமலை விழாவுக்கு வந்த அதிமுக எம்.பி செல்லக்குமார சின்னையாவை கிராம மக்கள் முற்றுகையிட்டு குடிநீர் வழங்கும் பணியை தாமதம் செய்வது ஏன் என கேள்வி எழுப்பினர்.  இதனால் ஆத்திரமடைந்த எம்.பி., செல்லகுமார சின்னையா, ‘‘எதிர்க்கட்சியினர் தூண்டி விட்டதால் பிரச்னை செய்கிறீர்களா’’ என கேட்டார். இதனால் பொதுமக்களுக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை  தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எம்.பி.,யை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: