தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. குறிப்பாக பகலில் வெயிலும், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 16ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: