பள்ளிகளில் வங்கிக் கணக்கு, ஆதார் பதிவுப் பணிகள்: அமைச்சர் ஆய்வு

சென்னை: 60 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே ஜூன் 10ம் தேதி முதல் தொடர்ந்து நடக்க இருக்கிறது. இந்தப் பணியை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். இந்த திட்டத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள 414 கல்வி வட்டாரங்களிலும் 770 ஆதார் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் நடப்பு கல்விஆண்டில் 60 லட்சம் பள்ளிக் குழந்தைகளும், அடுத்து வரும் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 16 முதல் 18 லட்சம் பள்ளிக் குழந்தைகளும் பயன்பெறுவர். மேலும், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே அஞ்சல் கணக்கு தொடங்கும் பணிக்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 45 ஆயிரத்து 917 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 66 லட்சத்து 3 ஆயிரம் மாணவ மாணவியர் பயன் பெற உள்ளனர்.

The post பள்ளிகளில் வங்கிக் கணக்கு, ஆதார் பதிவுப் பணிகள்: அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: