தேக்கம்பட்டி முகாமிலிருந்து திருவிடைமருதூர் கோயில் யானைக்கு சத்துணவுகள், மாத்திரை வந்தது

திருவிடமருருதூர்: திருவிடைமருதூரில் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மகாலிங்கசுவமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சந்திரன் தலமாகவும், 27 நட்சத்திரங்கள்  தோஷ நிவர்த்தி தலமாகவும்  விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள கோமதி  யானை கடந்த 1972ம் ஆண்டு சங்கரன்கோவிலில் இருந்து 24வது குருமகாசன்னிதானம் அம்பளவான தேசிக சுவாமிகளால் விலைக்கு வாங்கி வழங்கப்பட்டது. பகதர்களுககு ஆசி வழங்குவது, தேரோட்டம் உள்ளிட்ட கோயில் திருவிழா காலங்களில் யானையை அலங்கரித்து ஊர்வலமாக செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கோவை மேட்டுபாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைப்பெற்றுவருகிறது. கோமதி யானை உடல் நல குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாகவும் புத்துணர்வு  முகாமிற்கு அனுப்பபடவில்லை. இந்நிலையில் புத்துணர்வு முகாமில் மற்ற யானைகளுக்கு வழங்கப்படும் லேகியம், நோய் எதிர்ப்பு மாத்திரைகள், பருப்பு, கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சத்துள்ள விதவிதமான உணவுகள் முகாமில்  இருந்து கொண்டுவரப்பட்டு திருவிடைமருதூர் கோமதி யானைக்கு வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: