கூகுள் மேப் வழிகாட்டுதலில் பயணம் 30 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது : 3 வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருவனந்தபுரம்: கேரளாவில் கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது 30 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது, இதில், 3 வாலிபர்கள் உயிர் தப்பினர். புதிய இடங்களில் வழி தெரியாமல் பயணம் செய்பவர்கள், கூகுள் மேப்பை பயன்படுத்தி செல்கின்றனர். சில நேரங்களில் கூகுள் மேப்பில் தவறான பாதைகளும் காட்டப்படுவது நடக்கிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் வடக்கான்சேரி பகுதியை சேர்ந்த கோகுல்தாஸ் (23), இசகாக் (29), முஸ்தபா (36) ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை மூணாறுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டனர். இவர்கள் கூகுள் மேப்பை பார்த்தபடி பயணித்தனர்.

கோதமங்கலம் பகுதியில் சென்றபோது, கூகுள் மேப்பின்படி பாலமச்சம்-ஆவோலிச்சால் சாலை வழியாக சென்றால் 15 கிமீ குறையும் என குறிப்பிடப்பட்டது. இதனால், அந்த சாலை வழியாக கார் சென்றது. அப்போது, சிறிது தொலைவில் பாலம் கட்டும் பணிக்காக சாலையில் 30 அடி பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இரவு நேரம் என்பதால் வாலிபர்ள் அதை கவனிக்கவில்லை. வேகமாக சென்ற கார், 30 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.அந்த வழியாக வந்த தொழிலாளர்கள், 3 பேரையும் மீட்டனர். அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: