முன்னாடி ஒல்லியா இருந்தாங்க இப்போது குண்டா இருக்காங்க : சரத்யாதவ் பேச்சுக்கு வசுந்தரா கடும் எதிர்ப்பு

ஜெய்ப்பூர்: ‘‘தனிப்பட்ட முறையில் தன்னை விமர்சித்த சரத் யாதவ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரே ராேஜ வலியுறுத்தி உள்ளார். ராஜஸ்தானில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, ஐக்கிய ஜனதா தள முன்னாள் தலைவர் சரத் யாதவ், அல்வாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘மத்தியப் பிரதேசத்தின் மகளுக்கு (வசுந்தரா ராஜே) மக்கள் சற்று ஓய்வு கொடுக்க வேண்டும். அவர் மிகவும் சோர்வடைந்துள்ளார். முன்பெல்லாம் அவர் எடை குறைவாக இருந்தார். தற்போது குண்டாக இருக்கிறார்’ என கூறினார். சரத் யாதவின் இந்த கருத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரே ராஜே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வசுந்தரா கூறுகையில், ‘‘நான் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இது ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் கருத்து. இதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அனுபவமிக்க ஒரு தலைவரிடம் இருந்து இதுபோன்ற கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் ஆணையம் இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் திரும்பவும் நிகழாமல் தடுக்க முடியும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: