வெறுப்பை தூண்டும் விதமாக பேசும் மோடி பொது வாழ்வில் இருந்து விலக வேண்டும்: காங். தலைவர் கார்கே காட்டம்

புதுடெல்லி: வெறுப்பை தூண்டும் விதமாக பேசி வரும் பிரதமர் மோடி பொது வாழ்வில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே காட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், “மக்களவை தேர்தல் பிரசாரத்தில் தினமும் இந்து – முஸ்லிம்கள் பற்றி பேசி வரும் பிரதமர் மோடியின் நோக்கம் சுத்தமாக இல்லை. 2 எருமை மாடுகள் இருந்தால் ஒரு எருமை மாட்டை காங்கிரஸ் பறித்து கொள்ளும்.

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் இந்து, முஸ்லிம்களுக்கு தனித்தனியே பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று மோடி கூறுகிறார். இதுபோன்ற பேச்சுகளால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த மோடி முயற்சிக்கிறார். ஆனால் மறுபுறம் சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை. காங்கிரசின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராகவே பேசுகிறேன்.

இந்து – முஸ்லிம் என்று பேசினால் பொதுவாழ்க்கைக்கு தகுதி இல்லாதவனாகி விடுவேன் என்றும் மோடி பேசுகிறார். இந்து – முஸ்லிம் பற்றிய தன் பேச்சுகளின் பதிவுகளை மோடி பார்க்க வேண்டும். இதுபோன்ற பேச்சுகளுக்கு குறைந்தபட்சம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது தான் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற, பொதுவாழ்வில் இருந்து மோடி வௌியேற வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்தார்.

The post வெறுப்பை தூண்டும் விதமாக பேசும் மோடி பொது வாழ்வில் இருந்து விலக வேண்டும்: காங். தலைவர் கார்கே காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: