மக்கள் தான் எனது ஒரே வாரிசு: பிரதமர் மோடி

மோதிஹரி: எனக்கு மக்கள் தான் ஒரே வாரிசு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம், கிழக்கு சம்பரான் மக்களவை தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வகுப்பு வாதம், சாதி மற்றும் வாரிசு அரசியலில் இந்தியாகூட்டணி ஈடுபட்டு வருகின்றது. எனக்கு நாட்டு மக்கள் தான் ஒரே வாரிசு. உங்கள் ஒரு வாக்கு உள்ளூர் எம்பியை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல பிரதமரை வலுவாக்குவதற்கும் தான்.

இந்தியா கூட்டணியானது ஊழல், திருப்திபடுத்தும் அரசியல், பிரிவினைவாதத்தை தூண்டும் கும்பல் . இந்த கூட்டணியின் பாவங்களால் நாடு முன்னேற முடியாது. இந்தியா கூட்டணியானது முதல் கட்ட தேர்தலிலேயே சோர்ந்து போனதற்கு இதுவே காரணமாகும். அடுத்தடுத்த கட்டங்களிலும் இதே நிலை தொடரும். ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது எதிர்கட்சி கூட்டணிகளின் நோக்கங்களுக்கு மிகப்பெரும் அடியாக இருக்கும்.

எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசியினரின் இடஒதுக்கீட்டை பறித்து தங்கள் வாக்கு வங்கிக்கு தரும் வகையில் அரசியலமைப்பை மாற்றுவதற்கு காங்கிரஸ் விரும்புகின்றது. சுவிஸ் வங்கிகளில் பணத்தை குவித்து வைத்துள்ளனர்.பிறக்கும்போதே தங்கத்தட்டுடன் பிறந்தவர்கள். அவர்களால் ஏழை மக்களின் துயரத்தை புரிந்து கொள்ளமுடியாது என்றார்.

The post மக்கள் தான் எனது ஒரே வாரிசு: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: