தி.க. பொருளாளர் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரங்கல்

சென்னை: திராவிடர் கழக பொருளாளர் பிறைநுதல் செல்வி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி நேற்று சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட கழகத் தோழர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: