அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்படும்

தஞ்சை: கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படும். பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு தேவையான புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக தேவையான பாடப்புத்தகங்கள் எந்தெந்த பள்ளிக்கு தேவையோ அவற்றை உடனடியாக அனுப்ப தயாராக உள்ளோம். பள்ளிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் ₹2 லட்சம் வழங்கப்படும்.  

நிவாரணம் போதாது என்று விவசாய சங்கங்களின் தலைவர்களும், நாங்களும் முதல்வரிடம் எடுத்துரைத்தோம். தமிழக முதல்வரும் என்னனென்ன அரசால் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். மத்திய அரசோடு கலந்து பேசிய பிறகு விவசாயிகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதல்வர் ஆய்வு செய்து நிறைவேற்றுவார். ராணுவத்தை வைத்து செய்யக்கூடிய அளவில் பெரிய அளவிலான பணிகள் இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: