மேட்டூர் அணை ஆக.15ல் திறக்க பரிந்துரை

தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறப்பு குறித்து வல்லுநர் குழு அரசுக்கு அளித்த அறிக்கை குறித்து குழுவில் இடம்பெற்ற ஓய்வு பெற்ற வேளாண் மூத்த வல்லுநர்கள் கலைவாணன், பழனியப்பன், கலியமூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்வது கடினம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன் முதல் ஜனவரி வரை 167.25 டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர வேண்டும். இத்துடன் ஆரம்ப இருப்பையும் சேர்த்தால் 182 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். 740 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடியை, நாற்று விட்டு நடவு செய்தால் 300 டி.எம்.சி தேவைப்படுகிறது.

இவ்வாண்டில் நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. குறுவை, சம்பா பருவங்களில் 50% பரப்பில் நேரடி நெல்விதைப்பு செய்து, மற்ற பகுதியில் ஆற்றுநீர், மழை நீரை பயன்படுத்தினால் 230 டி.எம்.சி நீர் தேவைப்படும். இதற்கு ஜூன் மாத ஆரம்ப இருப்பாக குறைந்தது 65 டி.எம்.சியாவது இருக்க வேண்டும். இம்முறையை கையாள்வதும் சாத்தியமில்லை. இதனால் இரு போக சாகுபடிக்கு பதிலாக ஒருபோக சாகுபடியாக செயல்படுத்த வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் ஒருபோக சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15ம் தேதி அரசு திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மேட்டூர் அணை ஆக.15ல் திறக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: