வேப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு சீல்

வேப்பூர் : கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் வாரசந்தைக்கு பின்புறம் அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது அதனருகில் தனியார் பார் உள்ளது. இந்த பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக விருத்தாசலம் கலால் தாசில்தார் சத்தியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது  அதனடிப்படையில் நேற்று முன்தினம் கலால் தாசில்தார் சத்தியன் இந்த பாரில் திடீரென சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு சேகர் என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் சோதனை மேற்கொண்டதில் 10 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் பாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்த சேகரை விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் கலால் தாசில்தார் ஒப்படைத்தார். அனுமதியின்றி மது விற்பனை செய்த மதுபான பாரை மூடி தாசில்தார் சீல் வைத்தார்.  மேலும் வேப்பூர் கூட்ரோட்டில் 24 மணி நேரமும் மதுபான பார் செயல்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்….

The post வேப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: