மாநகராட்சியில் புதிதாக 3 குடிநீர் ஆய்வு கூடங்கள்

சென்னை: சென்னை நகரில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் ஆய்வு செய்வதற்காக சென்னை பெரியமேட்டில் ஒரே ஒரு ஆய்வு கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் குடிநீரை ஆய்வு செய்ய ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மையத்திற்கு ஒரு மாதத்திற்கு 1000க்கும் மேற்ப்பட்ட குடிநீர் மாதிரிகள் வருவதால் ஆய்வு அறிக்கை காலதமதமாக வழங்கப்பட்டுவந்தன. இதை தவிர்க்கவும் விரைந்து ஆய்வு அறிக்கை வழங்கவும் மேலும் 3 வட்டார குடிநீர் ஆய்வு கூடங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, மேற்கு வட்டாரத்தில் தொற்று நோய் மருத்துவமனை அருகிலும், மத்திய வட்டாரத்தில் சிஐடி நகர், தெற்கு வட்டாரத்தில் திருவான்மியூர் ஆகிய இடங்களில் ஆய்வு கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த ஆய்வு கூடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்தல் மற்றும் பல்வேறு செலவுகளுக்காக மொத்தம் ரூ.21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவுகளை ஈடுசெய்ய ஆய்வு கட்டணத்தை உயர்த்தவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: