ஆளில்லா பாக். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

அமிர்தரசஸ்: இந்திய எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்திய – பாகிஸ்தான் எல்லையில் அமிர்தசரஸ் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் விமானம் வருவதும், அதனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துவதும் நடந்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாபின் டர்ன் தரன் மாவட்டத்தின் ஃபெரோஸ்பூர் செக்டரில் உள்ள ஹர்பஜன் எல்லைச்சாவடி அருகே நேற்றிரவு பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் பறந்தது. அதனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டனர். இன்று காலையில் விவசாய நிலத்தில் மீட்கப்பட்டது. அந்த ஆளில்லா விமானத்தில் இருந்து ஏதேனும் வெடிபொருள்கள் கீழே விழுந்ததா என தேடும் பணி நடக்கிறது’ என்றார்….

The post ஆளில்லா பாக். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: