சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

திருச்சி: சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சீனா, அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதார  மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்; வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வருகிறது. கொரோனா வைரஸ் 10 விதமான உருமாற்றம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு மரபணு  பகுப்பாய்வு கூட்டம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் ஜப்பான், உள்ளிட்ட நாடுகளில் பரவுகிறது. ஒன்றிய அரசு அறிவுறுத்தல்படி கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவையான அளவிற்கு பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி 90%ஐ கடந்துள்ளது. சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார். …

The post சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: