கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளின் வாடகை நிலுவை தொகையை 30 நாளில் வசூலிக்க வேண்டும்: அறநிலையத்துறை அறிவுறுத்தல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: கோயில்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துகளுக்கான குத்தகை வாடகை நிலுவைத் தொகை 30 தினங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் வெளியேற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட கோயில் செயல் அலுவலர், நிர்வாகி, பரம்பரை அறங்காவலர் ஆகியோர் பதிவு தபால் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளில் சட்டபூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமில்லாமலும், உரிய வாடகை செலுத்தாமலும், நிலுவைத் தொகை செலுத்த முன்வராத நபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்து ஆக்கிரமிப்பு செய்திருந்த தனிநபர்கள் தானாக முன்வந்து கோயில் இடங்களை ஒப்படைத்து வருகிறார்கள். அதற்கான வாடகை நிலுவை தொகையினையும் செலுத்தி வருகிறார்கள். இதேபோல் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள கோயில் இடங்களை தாமாக முன்வந்து கோயிலில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளின் வாடகை நிலுவை தொகையை 30 நாளில் வசூலிக்க வேண்டும்: அறநிலையத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: