தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குனர்

சென்னை: கடந்த 2004ல் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றிய ரவி அரசு, கடந்த 2015ல் அதர்வா முரளி நடித்த ‘ஈட்டி’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானார். பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘ஐங்கரன்’ என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து விஷால், துஷாரா விஜயன் நடிப்பில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99வது படமான ‘மகுடம்’ என்ற படத்தை இயக்கி வந்தார்.

அப்போது படப்பிடிப்பில் ரவி அரசுக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது அப்படத்தை விஷால் இயக்குகிறார். ரவி அரசு கூறுகையில், ‘தற்போது பைவ் சி’ஸ் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இதன்மூலம் நான் இயக்கும் படங்களை தயாரித்து, இளம் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பு வழங்குவேன்’ என்றார்.

Related Stories: