சென்னை: கடந்த 2016ல் ஹரீஷ் கல்யாண், ஸ்ரீ, சிருஷ்டி டாங்கே, சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியான படம், ‘வில் அம்பு’. இப்படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் (49), நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். கடந்த சில மாதங்களாக எலும்பு புற்றுநோய் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தற்போது அவர் விக்ராந்த், யோகி பாபு நடிப்பில் ‘தி கில்லர் மேன்’ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தை இயக்கி வந்தார். கோவையிலுள்ள ரமேஷ் சுப்ரமணியத்தின் சொந்த ஊரான சுகுணாபுரத்தில், இன்று காலை அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.
