துஷ்யந்த், ஜனனி, ஜெயப்பிரகாஷ், சரத் லோகித்தஸ்வா, ரோஷன் பஷீர், ‘அருவி’ மதன், செந்திகுமாரி, சுப்பிரமணியம் சிவா, வினோதினி வைத்தியநாதன், பிரசன்னா பாலசந்திரன், மோகனா.ஆர், சத்யா, சஞ்சய், கோகுல், நிகில், மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி நடித்துள்ள படம், ‘ஆல் பாஸ்’. ஒன்ஸ் ஸ்டெப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா.ஆர் தயாரித்துள்ளார். தில் ராஜூ ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுத, எஸ்.பாஸ்கர் எடிட்டிங் செய்துள்ளார்.
டி.ஜெயசீலன் அரங்குகள் அமைக்க, ஐ.ராதிகா நடனப் பயிற்சி அளித்துள்ளார். மெட்ரோ மகேஷ் சண்டைக் காட்சிகள் அமைக்க, மைதீன் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், ‘இது முழுநீள ஃபேமிலி சென்டிமெண்ட் படம். வட சென்னை என்றாலே வேறுமாதிரி சொல்லி வந்த தமிழ் படவுலகில், முதல்முறையாக வட சென்னை மக்களின் யதார்த்த வாழ்வியலை பற்றி பேசியிருக்கிறோம். முழு படப்பிடிப்பும் வட சென்னை பகுதிகளில் நடந்து முடிந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்’ என்றார்.
