மும்பை: பாலிவுட் நடிகை மவுனி ராய், தொழிலதிபர் சூரஜ் நம்பியார் காதல் திருமணம், கடந்த 2022 ஜனவரி மாதம் கோவாவில் நடந்தது. இந்நிலையில், திடீரென்று அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 14ம் தேதி இருவரும் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். அவர்களின் பிரிவுக்கு பாலிவுட் நடிகை திஷா பதானி காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதன் காரணமாக திஷா பதானி தனது பதிவுகளுக்கு வரும் கமென்ட் வசதியை முடக்கினார்.
இந்நிலையில், திஷா பதானியுடன் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மவுனி ராய், ‘எனது குட்டி தங்கையை மிஸ் செய்கிறேன். சீக்கிரம் திரும்பி வா’ என்று குறிப்பிட்டு இருந்தார். இப்பதிவு வைரலான சிறிது நேரத்திலேயே மவுனி ராய் அதை நீக்கிவிட்டார். எனினும், அப்பதிவின் ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
திடீரென்று திஷா பதானியை ‘தங்கை’ என்று மவுனி ராய் குறிப்பிட்டு பதிவிட்டு, பிறகு அதை நீக்கியது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற செயல், ஏற்கனவே பரவியுள்ள வதந்திகளை மீண்டும் உறுதி செய்வது போல் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
