சென்னை: ஒன்ஸ் ஸ்டெப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா.ஆர் தயாரித்துள்ள படம், ‘ஆல் பாஸ்’. துஷ்யந்த், ஜனனி, ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணியம் சிவா, வினோதினி வைத்தியநாதன், பிரசன்னா பாலசந்திரன், மோகனா.ஆர், சத்யா, சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோருடன் சரத் லோகித்தஸ்வா, ரோஷன் பஷீர், ‘அருவி’ மதன், மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி நடித்துள்ளனர். தில் ராஜூ ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுத, எஸ்.பாஸ்கர் எடிட்டிங் செய்துள்ளார்.
ஜெயசீலன்.டி அரங்குகள் அமைக்க, ராதிகா நடனப் பயிற்சி அளித்துள்ளார். மெட்ரோ மகேஷ் சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். எழுதி இயக்கியுள்ள மைதீன் கூறுகையில், ‘வட சென்னை என்றாலே அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தம், பகை, கொலை என்றே காட்டியிருக்கின்றனர். இது எதுவுமே இல்லாத வட சென்னை மக்களின் யதார்த்த வாழ்வியலை பற்றி பேசும் குடும்ப கதை கொண்ட படமாக இது உருவாகியுள்ளது’ என்றார்.
