வைபவ் ஜோடியானார் மீனாட்சி கோவிந்தராஜன்

சென்னை: ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் இயக்குனர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குனர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தின் இயக்குனர் விஷ்ணு சசி சங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜே.கே. சரவணா மற்றும் ஜே.கே. சதீஷ் தயாரிக்கின்றனர். இசையை பிரேம் ஜி அமரன் அமைக்கிறார். ஒளிப்பதிவை யுவன் செல்வா கவனிக்கிறார்.

Related Stories: