ரஜினிதான் என்னை நடிகனாக்கினார்: டி.ராஜேந்தர் தகவல்

சென்னை: டி.ராஜேந்தர் இயக்கி நடித்து, 1983 மார்ச் 4ம் தேதி ரிலீசாகி மாபெரும் சாதனை படைத்த படம், ’உயிருள்ளவரை உஷா’. கங்கா, நளினி ஜோடியுடன் ராதாரவி, சரிதா, வெ.ஆ.மூர்த்தி நடித்தனர். 43 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் 4K தரத்தில் புதுப்பிக்கப்பட்டு, வரும் 13ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதுகுறித்த பிரஸ்மீட்டில் கலைப்புலி எஸ்.தாணு, ராதாரவி, ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், நளினி பங்கேற்றனர். அப்போது டி.ராஜேந்தர் பேசியதாவது:

‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் நான் நடித்த செயின் ஜெயபால் கேரக்டர் ரஜினிக்காக எழுதப்பட்டது. அப்போது இப்பட தயாரிப்பை வேறொருவரிடம் வழங்கினால் நடிப்பதாக ரஜினி சொன்னார். அதில் எனக்கு உடன்பாடு இல்லாததால், நானே அந்த கேரக்டரில் நடித்தேன். ரஜினி நடித்திருந்தால், நான் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மாறி, இன்றைய தேர்தல் களத்தில் போட்டியிட்டு இருப்பேன். நானே நடித்ததால், இன்றைக்கு நடிகனாக எனக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு ரஜினிதான் காரணம். படத்தை யாருடைய தலையிலும் கட்டாமல், நானே சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் வெளியிடுகிறேன். பணம் எனக்கு இரண்டாம் பட்சம்தான்.

Related Stories: