காட்டான் வெப்தொடர்: விமர்சனம்

அந்த கிராமத்தில் சில வருடங்களாக எந்தவொரு புகாரும் வராததால், நிரந்தரமாக மூடப்படும் நிலையில் இருக்கும் காவல் நிலையத்துக்கு திடீரென ஒரு கொலை வழக்கு வருகிறது. முத்து என்பவரின் தலை மட்டும் போலீசுக்கு கிடைக்கிறது. யார் அந்த முத்து? அவரை கொன்றது யார், எதற்காக கொன்றனர் என்பது மீதி கதை. கொல்லப்பட்ட முத்து கேரக்டரில் விஜய் சேதுபதி, தனது வழக்கமான டிரேட் மார்க் நடிப்பை வழங்கியுள்ளார். பல்வேறு தொழில்களில் அவர் ஈடுபடும் பிளாஷ்பேக் காட்சிகள், இத்தொடரை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை அதிகரிக்கிறது. மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேக்கப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், விஜே பார்வதி, அபி நட்சத்திரா ஆகியோர், அந்தந்த கேரக்டருக்கு இயல்பாக பொருந்தியுள்ளனர். கிராமத்து காட்சிகளை என்.சண்முகசுந்தரம், மது நீலகண்டன் யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் பின்னணி இசை ஓகே. பி.அஜித் குமார், எம்.மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். டார்க் திரில்லர் ஜானர் ரசிகர்களை இந்த வெப்சீரிஸ் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று (27ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

Related Stories: