ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் காஞ்சி கலெக்டர் திடீர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனை உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, இந்த மருத்துவமனை குறித்து நிர்வாகம் மற்றும் சுகாதார சீர்கேடு குறித்த பல்வேறு புகார்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு சென்றது.  இதனையடுத்து  காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று  ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது உள்நோயாளிகள் அறை, ஊசி செலுத்துமிடம், மருந்து அறை, காத்திருப்போர் அறை, பரிசோதனை அறை, கழிவறை மற்றும் வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், மருத்துவமனை வளாகத்தில் மின் விளக்குகள் முறையாக பராமரிக்காததால் வளாகம் முழுவதும் இருளில் மூழ்கி கிடந்தது. இதனை கண்ட கலெக்டர், `ஏன் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியபடித்தி சீரமைக்க வேண்டும்,’ என்றார். மேலும் உள்நோயாளிகள் 15 பேர் இருப்பதாக பதிவேட்டில் குறிப்பிடபட்டிருந்தது, உள்நோயாளி அறையில் சென்று பார்த்தபோது ஒருவர் மட்டுமே இருந்தார். இதனால் கோபமடைந்த கலெக்டர், `மாவட்ட நிர்வாகத்திற்கு தவறான தகவல்களை தெரிவித்து வருகிறீர்கள்,’ என்று எச்சரித்தார். …

The post ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் காஞ்சி கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: