ஆரி அர்ஜூனன் நடிக்கும் சைக்காலஜிக்கல் திரில்லர்

சென்னை: மனோ கிரியேஷன் சார்பில் ஏ.ராஜா தயாரிக்க, எல்.ஆர்.சுந்தரபாண்டி எழுதி இயக்கியுள்ள முழுநீள திரில்லர் படம், ‘ஃபோர்த் ஃப்ளோர்’. இது வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. இன்னும் தேதி முடிவாகவில்லை. சென்னையிலுள்ள குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், திடுக்கிட வைக்கும் பல்வேறு திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சைக்காலஜிக்கல் திரில்லரான இப்படம் கனவுகளுக்கும், வாழ்க்கைக்கும் இடை
யிலுள்ள தொடர்பை இயல்பாக சொல்கிறது. சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, சுப்பிரமணியம் சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். ‘போடா போடி’ தரண் குமார் இசை அமைக்க, ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் கல்லேரி அரங்கம் அமைக்க, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளார். ராம் சுதர்சன் எடிட்டிங் செய்ய, அபு சால்ஸ் நடனப் பயிற்சி அளித்துள்ளார். டேஞ்சர் மணி சண்டைக் காட்சி அமைக்கிறார்.

Related Stories: