சங்கமித்ரா உருவாகுமா?

நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி கூறியது: சங்கமித்ரா எனது கனவுப் படம்தான். அந்த சமயத்தில் சில காரணங்களால் அந்த படம் உருவாகவில்லை. அதனால் அதை கைவிட்டதாக அர்த்தம் இல்லை. அந்த படத்தை மீண்டும் உருவாக்குவேன். ஆனால் இப்போதைக்கு மூக்குத்தி அம்மன் 2, புருஷன் படங்களில் பிசியாக இருக்கிறேன். சங்கமித்ரா படத்தை இரண்டு ஆண்டுகள் கழித்து உருவாக்கலாம். மூக்குத்தி அம்மன் 2 படத்தில் முழு படத்திலும் நயன்தாரா அம்மன் வேடத்திலேயே நடித்திருக்கிறார்.

இதன் 3வது பாகம் எடுப்பது பற்றி யோசிக்கவில்லை. அதேபோல் அரண்மனை 5 உருவாகுமா எனக் கேட்கிறார்கள். அதையும் முடிவு செய்யவில்லை. இந்த தகவலை சென்னையில் பியூட்டிஷியன் கிருஷ்ணாவின் பேஜ் 3 லக்ஸரி சலூன் அண்ட் மேக்ஓவர் ஸ்டுடியோ திறப்பு விழாவில் பங்கேற்றபோது சுந்தர்.சி தெரிவித்தார்.

Related Stories: