தமிழில் கடந்த 2011ல் விக்ரம் நடித்து வெளியான ‘தெய்வத்திருமகள்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சாரா அர்ஜூன். தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வந்த அவர், தற்போது 20 வயதை கடந்து ஹீரோயினாகி விட்டார். இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான ‘துரந்தர்’ என்ற படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்து, கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். இப்படம் ரூ.1,300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது தென்னிந்திய படங்களில் ஹீரோயினாக நடிக்க கதை கேட்டு வரும் அவர், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள ‘யூஃபோரியா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை ‘ஒக்கடு’ குணசேகர் இயக்கியுள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாரா அர்ஜூன் பாவாடை, தாவணி அணிந்திருந்தார். மேலும், அந்த உடையில் தனி போட்டோஷூட் நடத்திய அவர், எல்லா போட்டோக்களையும் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
