சிவாஜிக்கும், செல்வராகவனுக்கும் என்ன தொடர்பு?

யோகி​ பாபு நடித்த ‘ட்​ரிப்’, ‘தூக்​குதுரை’ ஆகிய படங்​களை இயக்​கிய டென்​னிஸ் மஞ்​சு​நாத், கிராமத்​து பின்​னணி​யில் இயக்கியுள்ள படம், ‘மனிதன் தெய்​வ​மாகலாம்’. இதில் செல்​வ​ராகவன், கவுசல்​யா, குஷி ரவி, ஒய்​.ஜி.மகேந்திரன், மைம் கோபி நடித்துள்ளனர். ரவிவர்மா ஒளிப்​ப​திவு செய்​ய, ஏ.கே.பிரியன் இசை அமைத்​துள்​ளார். அடுத்த மாதம் திரைக்கு வரும் இப்படத்தை வயோம் எண்டர்​டெ​யின்மெண்ட் சார்​பில் விஜயா சதீஷ், ஆர்​.எஸ்.சதீஷ் இணைந்து தயாரித்​துள்ளனர்.

படம் குறித்து டென்னிஸ் மஞ்சுநாத் கூறுகையில், ‘தமிழ்​நாட்​டில் நடந்த உண்​மைச் சம்​பவத்தை மையமாக வைத்து, பெண்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்தும் கதையுடன் படம் உருவாகியுள்ளது. ஒரு கிராமத்​தில், ஒரு குடும்​பத்​தில் நடக்​கும் பிரச்​னை​யில் அரசி​யல் நுழை​யும்​போது அந்த குடும்​பத்​துக்​கும், கிராமத்​துக்​கும் என்ன விளைவு​கள் ஏற்​படுகிறது? அந்​த பிரச்​னை​களை தீர்க்க ஹீரோ என்ன செய்கிறார் என்பது திரைக்கதை. ஒரு கணவன், மனை​விக்​குள் இருக்​கும் காதலை பற்றி சொல்லும் படம் இது. தனது கேரக்டருக்காக செல்வராகவன் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அவர் நுங்கு வியா​பாரியாக வருகிறார். அவரது அக்​காவாக கவுசல்யா நடித்துள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘மனிதனும் தெய்​வ​மாகலாம்​’ என்ற படத்துக்கும், எங்கள் படத்துக்கும் எந்த சம்​பந்​தமும் இல்​லை’ என்றார்.

Related Stories: